Monday, 11 October 2021

Current Affairs  -2021 October-10 


9) இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கடவுள்களான ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.


8) ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பின், மத்திய தொல்லியல் துறையினர் மீண்டும் அகழாய்வு பணியை துவக்கினர்.


துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக் கரையில் உள்ள ஆதிச்சநல்லுாரில், ஆங்கிலேயர் காலத்தில், 146 ஆண்டுகளுக்கு முன் அகழாய்வு நடந்துள்ளது. 2004ல் மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொண்டனர்.ஆதிச்சநல்லுாரில் புதிய இடங்களில், தமிழக தொல்லியல் துறையினர் கடந்த இரண்டு ஆண்டு களாக அகழாய்வு செய்தனர்.


2019 மத்திய பட்ஜெட்டில், 'ஆதிச்சநல்லுாரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதன்படி, மத்திய தொல்லியல் துறையின், திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் மீண்டும் அகழாய்வு பணிகளை நேற்று துவக்கினர். 17 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இப்பணி, மூன்று முதல் ஆறு மாதங்கள் நடக்கிறது.வெளிநாடுகளில் உள்ளது போல, இங்கே கிடைத்த தொன்மை பொருட்களின் நிகழ்விட அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட உள்ளது.


7) இன்று உலக வீடற்றோர் தினம் (10-10) உலக வீடற்றோர் நாளை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி இன்று நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


6) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற அன்ஷு மாலிக் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சரிதா மோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.


5) கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.


4) இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டியில் தமிழக மாணவி வினிஷா உமா சங்கரின் சோலார் இஸ்திரி வண்டி பங்கேற்கிறது.


3) அரசு முறை இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரட்ரிக்சென் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார்.


2) ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில்  16 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட 40 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “நமது துப்பாக்கி சுடும் வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்!


1) ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக, தமிழக கவர்னர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.


புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.,யில், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்ட எல்லையில், ஆரோவில் சர்வதேச நகர் அமைந்துஉள்ளது. அரவிந்தர் ஆசிரம அன்னையின் முயற்சியால், 1968 பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,800 பேர் இங்கு வசிக்கின்றனர்


October-9


3) இந்தியா-டென்மார்க் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.


டென்மார்க் பிரதமர் மெட்டா பிரெடெரிக்சன் மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்த டென்மார்க் பிரதமர் மெட்டா பிரெடெரிக்சனை, பிரதமர் மோடி வரவேற்றார். 


நிலத்தடி நீராதாரம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ்  இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.


அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - ஐதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், ஆர்ஹஸ் பல்கலைக்கழகம் டென்மார்க்,  டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் நீர்நிலைகளின் வரைபடம் ஆக்குதல்  தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


பாரம்பரிய அறிவு குறித்து அறிய டிஜிட்டல் நூலக வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக டேனிஷ் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகம் - அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்  இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்றவாறு  இயற்கை குளிரூட்டிகள் அமைப்பது தொடர்பாக ஐ.ஐ.டி பெங்களூரு - டான்போஸ் ஆலை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் டென்மார்க் அரசாங்கம் இடையேயான கூட்டு நடவடிக்கைக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகி உள்ளன.


2) நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான 'ஏர் இந்தியா'வை வாங்கும் ஏலத்தில், 'டாடா' நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. 18,000 கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை, டாடா நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 61,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சமாளிக்க, அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. 


1) 120 மொழிகளில் தொடர்ந்து பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த கேரள மாணவி-சுசேத்தா சதிஷ், 


October-6


2) வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ‛புலம்பெயர் தமிழர் நலவாரியம்' என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் ‛புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக' கொண்டாடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


1)  2021ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசானது ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பு ஆராய்ச்சிக்காக இருவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.


October-5


இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று (அக்.,05) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவின் சுயுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


அதில், சுயுகுரோ மனாபே, கிளாஸ் ஹசில்மேன் ஆகியோருக்கு புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதலை கணித்தல் போன்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியோ பரிசிக்கு, உடல்கோளாறுகள் மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியை கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


1) ஐந்தாம் ஆண்டு தீபோத்சவ் விளக்கேற்றும் விழா உ.பி.,யில் கொண்டாடப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு கின்னஸ் சாதனையை முறித்து புதிய சாதனை படைக்க யோகி அரசு திட்டமிட்டுள்ளது.


யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராகப் பதவியேற்றதும் தீபோத்சவ் என்கிற அகல் விளக்கு ஏற்றும் பண்டிகை அயோத்தியா நகரில் கொண்டாடப்படுகிறது. இதன்படி விழா நாட்களில் லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமான கொண்டாட்டம் நடைபெறும்.


October-4


6) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்க வகை செய்யும் ‘பிரதமா் ஊட்டச்சத்து திட்டத்துக்கு’ (பிஎம்-போஷண்) மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியது. நாடு முழுவதுமுள்ள 11.20 லட்சம் பள்ளிகளில் பயிலும் சுமாா் 11.80 கோடி மாணவா்கள் இத்திட்டத்தின் வாயிலாகப் பலனடைவா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


5) உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பதக்கம் வென்றனர். 47 நாடுகளில் உள்ள வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். 


இதில் ஜூனியர் பிரிவில் சுரேஷ் ஆணழகன் பட்டத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதே பிரிவில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு வீரரான விக்னேஷ் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றார். சீனியர் பிரிவில்  தமிழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.


4) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 அன்று உலக விலங்குகள் தினமாக கொண்டாடப்படுகிறது.


3) நாளை(5-10-2021) நடைபெறும் 'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு


உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை ( செவ்வாய்க்கிழமை) 'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.


உத்தரபிரதேசத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற (PMAY -U) வீடுகள் திட்டத்தை பிரதமர் டிஜிட்டல் முறையில் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து இந்த திட்டத்தின் பயனாளிகளுடன்  உரையாடுகிறார். பின்னர் ஸ்மார்ட் சிட்டி மிஷன் மற்றும்  உத்தரபிரதேசத்தின் 75 நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுகிறார். 


2) உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நாளை நடைபெறும் 'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.


1) மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.,04) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.


October-3


4) காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் உலகிலேயே மிகப் பெரிய காதி தேசியக் கொடிக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


காதி துணி கொண்டு கையால் நெய்த 1,000 கிலோ எடைகொண்ட தேசியக் கொடி லடாக்கில், காந்தி ஜெயந்தியையொட்டி சனிக்கிழமை(OCT-2) நிறுவப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் மிகப் பெரிய தேசியக் கொடியாகும்.


3) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா கட்டடத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படம் ஒளிவிளக்குகளால் மிளிர்ந்தது.

காந்தி ஜெயந்தியான நேற்று(அக்.,2) நேற்று இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சர்வதேச அளவில், காந்தி ஜெயந்தி, வன்முறையற்ற சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது.


2) இந்தாண்டில் உள்நாட்டு தொழில் நுட்பங்களுடன் பூமியை கண்காணிக்கும் 3 முக்கிய செயற்கைக் கோள்கள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

முதலில் இ.ஒ.எஸ்-4 (ரைசாட்-1ஏ) மற்றும் இ.ஒ.எஸ்-6 (ஓசியன் சாட்-3) ஆகிய செயற்கைக்கோளும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது.


1) கடந்த 75 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய மருந்தகமாக இந்தியா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

கடற்கரை கோவில் மகாபலிபுரம் | Beach Temple Mahabalipuram

கடற்கரை கோவில் மகாபலிபுரம்.!! Beach Temple Mahabalipuram.!! Bright Zoom Today, மகாபலிபுரம்.!! காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம...