Monday, 20 March 2023

கடற்கரை கோவில் மகாபலிபுரம் | Beach Temple Mahabalipuram

கடற்கரை கோவில் மகாபலிபுரம்.!!

Beach Temple Mahabalipuram.!!

Bright Zoom Today,

Beach Temple Mahabalipuram.!! Bright Zoom Today,

மகாபலிபுரம்.!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் (மகாபலிபுரம்) ஒரு முக்கிய சுற்றுலா தலம் ஆகும். வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்புமுனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்கிறது. 


சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ, செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரம் அமைந்துள்ளது. 


தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோவில் மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் ஆகும். இது பல்லவர்களால் கட்டப்பட்டது.

Beach Temple Mahabalipuram.!! Bright Zoom Today,1

சிறப்புகள் :

இந்த இடத்தை ஐ.நா சபையின் UNESCO உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இடம் தமிழகத்தின் மிக பிரபலமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. 


இந்த இடத்தின் மூலம் தமிழகத்தின் வரலாற்றையும், சிற்பக்கலையையும், பாரம்பரியத்தையும் தெரிந்து கொள்வதற்காக பல வெளிநாட்டுப் பயணிகளும் வருகை தருகின்றனர்.


ரத வடிவில் உள்ள கோவில்கள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என மகாபலிபுரம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.


உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மகாபலிபுரம் தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.


எப்படி செல்வது?

சென்னைக்கு மிக அருகாமையிலும் பாண்டிச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு பயணிக்கலாம். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நகரங்களிலிருந்தும் மகாபலிபுரத்துக்கு பேருந்து வசதிகளும் இருக்கின்றன.


விமான வசதி :

சென்னை, திருச்சியில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. 


ரயில் வசதி :

செங்கல்பட்டு (22 கி.மீ) அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும். இருப்பினும், சென்னை ரயில் நிலையம் (60 கி.மீ) அருகில் உள்ள பெரிய ரயில் நிலையமாகும்.


மகாபலிபுரத்தை அடைவதற்கு டாக்ஸி அல்லது வாடகை வண்டிகள் மற்றும் பேருந்துகள் இந்த நிலையங்களிலிருந்து கிடைக்கின்றன.


செல்ல வேண்டிய நேரம் :

வெப்பமண்டலத்தில் இருப்பதால் கோடை விடுமுறையில் சென்று வர இது சிறந்த இடமல்ல. காரணம் மிக அதிகமான வெப்பம் நிலவும் காலமாகும்.


நவம்பர் முதல் பிப்ரவரி வரை சிறிது வெப்பம் தணிந்து காணப்படும். அந்நேரத்தில் சுற்றிப்பார்க்க எதுவாக இருக்கும்.


பார்க்க வேண்டிய இடங்கள் :

மகாபலிபுரத்தின் கடற்கரை கோவில், குகைக் கோவில்கள், அர்சுணன் தபசு செய்யும் சிற்பம், ஐந்து ரதம், புலிக்குகை மற்றும் ஏராளமான சிற்பங்கள் இருக்கின்றன.


இதர சுற்றுலா தலங்கள்:

மகாபலிபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 


கடற்கரையை ஒட்டியே மகாபலிபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது இதன் மற்றொரு விசேஷ அம்சமாகும்.


நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு துர்க்கையம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இங்கு பல அழகிய சிலைகளை பார்க்கலாம். 


புலிக்குகை, அருங்காட்சியகம் மற்றும் முதலைப்பண்ணை போன்றவை பயணிகள் விரும்பக்கூடிய இதர சுற்றுலா தலங்களாக அமைந்துள்ளன.

Tags :Mahabalipuram, rockMahabs, tourtour to Mahabalipuramtrip ,chennai ,Chennai places to visitTour , spots chennaiMust see place Mahabalipuram, rock temple mahabs,


No comments:

Post a Comment

கடற்கரை கோவில் மகாபலிபுரம் | Beach Temple Mahabalipuram

கடற்கரை கோவில் மகாபலிபுரம்.!! Beach Temple Mahabalipuram.!! Bright Zoom Today, மகாபலிபுரம்.!! காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம...