Monday, 20 March 2023

கடற்கரை கோவில் மகாபலிபுரம் | Beach Temple Mahabalipuram

கடற்கரை கோவில் மகாபலிபுரம்.!!

Beach Temple Mahabalipuram.!!

Bright Zoom Today,

Beach Temple Mahabalipuram.!! Bright Zoom Today,

மகாபலிபுரம்.!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் (மகாபலிபுரம்) ஒரு முக்கிய சுற்றுலா தலம் ஆகும். வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்புமுனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்கிறது. 


சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ, செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரம் அமைந்துள்ளது. 


தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோவில் மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் ஆகும். இது பல்லவர்களால் கட்டப்பட்டது.

Beach Temple Mahabalipuram.!! Bright Zoom Today,1

சிறப்புகள் :

இந்த இடத்தை ஐ.நா சபையின் UNESCO உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இடம் தமிழகத்தின் மிக பிரபலமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. 


இந்த இடத்தின் மூலம் தமிழகத்தின் வரலாற்றையும், சிற்பக்கலையையும், பாரம்பரியத்தையும் தெரிந்து கொள்வதற்காக பல வெளிநாட்டுப் பயணிகளும் வருகை தருகின்றனர்.


ரத வடிவில் உள்ள கோவில்கள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என மகாபலிபுரம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.


உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மகாபலிபுரம் தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.


எப்படி செல்வது?

சென்னைக்கு மிக அருகாமையிலும் பாண்டிச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு பயணிக்கலாம். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நகரங்களிலிருந்தும் மகாபலிபுரத்துக்கு பேருந்து வசதிகளும் இருக்கின்றன.


விமான வசதி :

சென்னை, திருச்சியில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. 


ரயில் வசதி :

செங்கல்பட்டு (22 கி.மீ) அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும். இருப்பினும், சென்னை ரயில் நிலையம் (60 கி.மீ) அருகில் உள்ள பெரிய ரயில் நிலையமாகும்.


மகாபலிபுரத்தை அடைவதற்கு டாக்ஸி அல்லது வாடகை வண்டிகள் மற்றும் பேருந்துகள் இந்த நிலையங்களிலிருந்து கிடைக்கின்றன.


செல்ல வேண்டிய நேரம் :

வெப்பமண்டலத்தில் இருப்பதால் கோடை விடுமுறையில் சென்று வர இது சிறந்த இடமல்ல. காரணம் மிக அதிகமான வெப்பம் நிலவும் காலமாகும்.


நவம்பர் முதல் பிப்ரவரி வரை சிறிது வெப்பம் தணிந்து காணப்படும். அந்நேரத்தில் சுற்றிப்பார்க்க எதுவாக இருக்கும்.


பார்க்க வேண்டிய இடங்கள் :

மகாபலிபுரத்தின் கடற்கரை கோவில், குகைக் கோவில்கள், அர்சுணன் தபசு செய்யும் சிற்பம், ஐந்து ரதம், புலிக்குகை மற்றும் ஏராளமான சிற்பங்கள் இருக்கின்றன.


இதர சுற்றுலா தலங்கள்:

மகாபலிபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 


கடற்கரையை ஒட்டியே மகாபலிபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது இதன் மற்றொரு விசேஷ அம்சமாகும்.


நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு துர்க்கையம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இங்கு பல அழகிய சிலைகளை பார்க்கலாம். 


புலிக்குகை, அருங்காட்சியகம் மற்றும் முதலைப்பண்ணை போன்றவை பயணிகள் விரும்பக்கூடிய இதர சுற்றுலா தலங்களாக அமைந்துள்ளன.

Tags :Mahabalipuram, rockMahabs, tourtour to Mahabalipuramtrip ,chennai ,Chennai places to visitTour , spots chennaiMust see place Mahabalipuram, rock temple mahabs,


Friday, 10 December 2021

உலக வராலாற்றில் இன்று..! டிசம்பர் 10

உலக வராலாற்றில் இன்று..!

டிசம்பர் 10

வலியின்றி வரலாறு இல்லை... இன்றைய நாள் யாரை சிறப்பிக்கிறது?

★  நோபல் பரிசு விழா..!

★  சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம்..!

★  உலக மனித உரிமைகள் தினம்..!

★ மூதறிஞர் ராஜாஜி..!


நோபல் பரிசு விழா :

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு நோபல் பரிசாகும். சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களால் 1895ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டிலிருந்து இப்பரிசு வழங்கப்படுகிறது. ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10ஆம் தேதியில் நோபல் பரிசு விழா நடைபெறுகிறது.


சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம் :

சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகளின் உரிமைக்காக விலங்குகள் போராட முடியாது. விலங்குகளின் நலன் காக்க அவைகளின் உரிமைக்காக மனிதர்கள்தான் போராட வேண்டும் என விலங்குகளின் நலன் கருதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


உலக மனித உரிமைகள் தினம்..!

உலக மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.பொதுச்சபை 1948ஆம் ஆண்டு இத்தினத்தை பிரகடனப்படுத்தியது. மனிதர்களை சாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடு காட்டி வேறுபடுத்தக்கூடாது. தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வகை செய்வதே மனித உரிமையாகும். இத்தினம் 1950ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

மூதறிஞர் ராஜாஜி

சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், இந்தியாவின் கவர்னர் ஜெனரல், சென்னை மாகாண முதல்வர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ராஜகோபாலாச்சாரி 1878ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் (அன்றைய சேலம் மாவட்டம்) தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.


இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். மேலும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றார்.


இவர் 1917ஆம் ஆண்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகராட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் பிரதான மந்திரியாகப் பொறுப்பேற்றார். 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.


1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சேலத்து மாம்பழம் என்று அழைக்கப்பட்ட ராஜாஜி 1972ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்

★ 2006ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இந்திய இயற்பியலாளரான மதன் லால் மேத்தா மறைந்தார்.

★  2016ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இந்திய பொறியியல் அறிஞரும், கல்வியாளருமான வா.செ.குழந்தைசாமி மறைந்தார்

Monday, 18 October 2021

இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

இந்த ஆண்டு  மருத்துவத்திற்கான நோபல் பரிசு...!

This year's Nobel Prize in Medicine ...!

இந்த ஆண்டு  மருத்துவத்திற்கான நோபல் பரிசு...!

Bright Zoom Today

இந்த ஆண்டு  உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு  - ஆராய்ச்சியாளர்கள், கலிபோர்னியா, லா ஜேஓலாசான் பிரான்சிஸ்கோ மற்றும் ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து டேவிட் ஜூலியஸ் மற்றும் Ardem Patapoutian வழங்கப்பட்டது முறையே - மரபணு கண்டறிதலும், புரிந்துகொள்ளலும் தங்கள் வீரரின் எழுத்துச் அங்கீகரிக்கிறது  பொறிமுறையை இதன் மூலம் நமது உடல் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை உணர்கிறது .

வேதியியலுக்கான நோபல் பரிசு ஒரு திறமையான, “துல்லியமான, மலிவான, வேகமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த” புதிய மூலக்கூறுகளை உருவாக்கும் எளிய மற்றும் புதிய வினையூக்கக் கருவியைப் பயன்படுத்தி சமச்சீரற்ற ஆர்கனோகாடாலிசிஸ். மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டின் ஜெர்மன் விஞ்ஞானி பெஞ்சமின் பட்டியல் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஸ்காட்லாந்தில் பிறந்த விஞ்ஞானி டேவிட் டபிள்யூசி மேக்மில்லன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

உடலியல் அல்லது மருத்துவத்திற்கான 2021 நோபல் பரிசு  கூட்டாக டேவிட் ஜூலியஸ், 66, ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி, லா Jolla, கலிபோர்னியாவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் பிரான்சிஸ்கோ மற்றும் Ardem Patapoutian, 54, மணிக்கு, வெப்பநிலை ஏற்பிகளைக் தங்கள் கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்பட்டது "மற்றும் தொடு ".

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்ததற்காக , இரண்டு பத்திரிகையாளர்கள் அமைதிக்கான நோபல் பரிசை வென்றனர் . இது அக்டோபர் 8 அன்று பிலிப்பைன்ஸின் மரியா ரெசா மற்றும் ரஷ்யாவின் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறப்புகள் :

 பொட்டலம்நோபல் பரிசுகள் 2021நோபல் பரிசு 2021 அறிவிப்பு அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11 ஆம் தேதி இறுதி விருதான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பொருளாதார அறிவியலுடன் முடிந்தது.


Monday, 11 October 2021

அக்டோபர் - 10 - 2021நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்...!!

அக்டோபர் - 10 - 2021நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்...!!

◆  நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எத்தனை சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது? - 8.3 சதவீதம்


◆  இந்தியர்கள் எத்தனை பேருக்கு சர்வதேச ஹhக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஹெச்) 2020-21 ஆம் ஆண்டுக்கான விருதுகள் கிடைத்துள்ளது? - எட்டு 


◆  தற்போது நாட்டில் உள்ள கேரளம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பாட்னா உயர்நீதிமன்றங்களுக்கு எத்தனை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்? - 9 நீதிபதிகள்


◆  இந்த ஆண்டின் (2021) வேதியியலுக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படவுள்ளது? - பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் வில்லியம் கிராஸ் மேக்மில்லன் 


◆  மொராக்கோவில் சஹhரா பாலைவனத்தில் நடந்த மாரத்தான் போட்டியின் 3 ஆம் சுற்றில் முதலிடம் பிடித்தவர் யார்? - மொஹமத் எல் மொரபிட்டி


◆  இந்தியாவில் எத்தனை இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது? - 7 இடங்கள் 


◆  மத்தியப் பிரதேசத்தில் 3 ஆயிரம் கிராமங்களுக்குட்பட்ட 1.7 லட்சம் குடும்பங்களுக்கு, இ-சொத்து அட்டைகளை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார்? - நரேந்திர மோடி


◆  தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 400 சிக்சர்கள் அடித்து புதிய சாதனையை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? - ரோஹித் ஷர்மா


◆ தற்போது எந்த மாநிலத்தில் பணம் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ள பந்தயம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ளது? - கர்நாடகா


 ◆ தற்போது ஐபிஎல் 2021 போட்டியில் மணிக்கு 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்த பந்து வீச்சாளர் யார்? - உம்ரான் மாலிக்




Current Affairs  -2021 October-10 


9) இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கடவுள்களான ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.


8) ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பின், மத்திய தொல்லியல் துறையினர் மீண்டும் அகழாய்வு பணியை துவக்கினர்.


துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக் கரையில் உள்ள ஆதிச்சநல்லுாரில், ஆங்கிலேயர் காலத்தில், 146 ஆண்டுகளுக்கு முன் அகழாய்வு நடந்துள்ளது. 2004ல் மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொண்டனர்.ஆதிச்சநல்லுாரில் புதிய இடங்களில், தமிழக தொல்லியல் துறையினர் கடந்த இரண்டு ஆண்டு களாக அகழாய்வு செய்தனர்.


2019 மத்திய பட்ஜெட்டில், 'ஆதிச்சநல்லுாரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதன்படி, மத்திய தொல்லியல் துறையின், திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் மீண்டும் அகழாய்வு பணிகளை நேற்று துவக்கினர். 17 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இப்பணி, மூன்று முதல் ஆறு மாதங்கள் நடக்கிறது.வெளிநாடுகளில் உள்ளது போல, இங்கே கிடைத்த தொன்மை பொருட்களின் நிகழ்விட அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட உள்ளது.


7) இன்று உலக வீடற்றோர் தினம் (10-10) உலக வீடற்றோர் நாளை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி இன்று நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


6) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற அன்ஷு மாலிக் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சரிதா மோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.


5) கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.


4) இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டியில் தமிழக மாணவி வினிஷா உமா சங்கரின் சோலார் இஸ்திரி வண்டி பங்கேற்கிறது.


3) அரசு முறை இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரட்ரிக்சென் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார்.


2) ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில்  16 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட 40 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “நமது துப்பாக்கி சுடும் வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்!


1) ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக, தமிழக கவர்னர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.


புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.,யில், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்ட எல்லையில், ஆரோவில் சர்வதேச நகர் அமைந்துஉள்ளது. அரவிந்தர் ஆசிரம அன்னையின் முயற்சியால், 1968 பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,800 பேர் இங்கு வசிக்கின்றனர்


October-9


3) இந்தியா-டென்மார்க் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.


டென்மார்க் பிரதமர் மெட்டா பிரெடெரிக்சன் மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்த டென்மார்க் பிரதமர் மெட்டா பிரெடெரிக்சனை, பிரதமர் மோடி வரவேற்றார். 


நிலத்தடி நீராதாரம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ்  இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.


அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - ஐதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், ஆர்ஹஸ் பல்கலைக்கழகம் டென்மார்க்,  டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் நீர்நிலைகளின் வரைபடம் ஆக்குதல்  தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


பாரம்பரிய அறிவு குறித்து அறிய டிஜிட்டல் நூலக வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக டேனிஷ் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகம் - அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்  இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்றவாறு  இயற்கை குளிரூட்டிகள் அமைப்பது தொடர்பாக ஐ.ஐ.டி பெங்களூரு - டான்போஸ் ஆலை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் டென்மார்க் அரசாங்கம் இடையேயான கூட்டு நடவடிக்கைக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகி உள்ளன.


2) நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான 'ஏர் இந்தியா'வை வாங்கும் ஏலத்தில், 'டாடா' நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. 18,000 கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை, டாடா நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 61,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சமாளிக்க, அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. 


1) 120 மொழிகளில் தொடர்ந்து பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த கேரள மாணவி-சுசேத்தா சதிஷ், 


October-6


2) வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ‛புலம்பெயர் தமிழர் நலவாரியம்' என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் ‛புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக' கொண்டாடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


1)  2021ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசானது ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பு ஆராய்ச்சிக்காக இருவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.


October-5


இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று (அக்.,05) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவின் சுயுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


அதில், சுயுகுரோ மனாபே, கிளாஸ் ஹசில்மேன் ஆகியோருக்கு புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதலை கணித்தல் போன்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியோ பரிசிக்கு, உடல்கோளாறுகள் மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியை கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


1) ஐந்தாம் ஆண்டு தீபோத்சவ் விளக்கேற்றும் விழா உ.பி.,யில் கொண்டாடப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு கின்னஸ் சாதனையை முறித்து புதிய சாதனை படைக்க யோகி அரசு திட்டமிட்டுள்ளது.


யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராகப் பதவியேற்றதும் தீபோத்சவ் என்கிற அகல் விளக்கு ஏற்றும் பண்டிகை அயோத்தியா நகரில் கொண்டாடப்படுகிறது. இதன்படி விழா நாட்களில் லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமான கொண்டாட்டம் நடைபெறும்.


October-4


6) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்க வகை செய்யும் ‘பிரதமா் ஊட்டச்சத்து திட்டத்துக்கு’ (பிஎம்-போஷண்) மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியது. நாடு முழுவதுமுள்ள 11.20 லட்சம் பள்ளிகளில் பயிலும் சுமாா் 11.80 கோடி மாணவா்கள் இத்திட்டத்தின் வாயிலாகப் பலனடைவா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


5) உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பதக்கம் வென்றனர். 47 நாடுகளில் உள்ள வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். 


இதில் ஜூனியர் பிரிவில் சுரேஷ் ஆணழகன் பட்டத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதே பிரிவில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு வீரரான விக்னேஷ் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றார். சீனியர் பிரிவில்  தமிழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.


4) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 அன்று உலக விலங்குகள் தினமாக கொண்டாடப்படுகிறது.


3) நாளை(5-10-2021) நடைபெறும் 'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு


உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை ( செவ்வாய்க்கிழமை) 'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.


உத்தரபிரதேசத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற (PMAY -U) வீடுகள் திட்டத்தை பிரதமர் டிஜிட்டல் முறையில் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து இந்த திட்டத்தின் பயனாளிகளுடன்  உரையாடுகிறார். பின்னர் ஸ்மார்ட் சிட்டி மிஷன் மற்றும்  உத்தரபிரதேசத்தின் 75 நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுகிறார். 


2) உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நாளை நடைபெறும் 'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.


1) மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.,04) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.


October-3


4) காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் உலகிலேயே மிகப் பெரிய காதி தேசியக் கொடிக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


காதி துணி கொண்டு கையால் நெய்த 1,000 கிலோ எடைகொண்ட தேசியக் கொடி லடாக்கில், காந்தி ஜெயந்தியையொட்டி சனிக்கிழமை(OCT-2) நிறுவப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் மிகப் பெரிய தேசியக் கொடியாகும்.


3) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா கட்டடத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படம் ஒளிவிளக்குகளால் மிளிர்ந்தது.

காந்தி ஜெயந்தியான நேற்று(அக்.,2) நேற்று இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சர்வதேச அளவில், காந்தி ஜெயந்தி, வன்முறையற்ற சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது.


2) இந்தாண்டில் உள்நாட்டு தொழில் நுட்பங்களுடன் பூமியை கண்காணிக்கும் 3 முக்கிய செயற்கைக் கோள்கள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

முதலில் இ.ஒ.எஸ்-4 (ரைசாட்-1ஏ) மற்றும் இ.ஒ.எஸ்-6 (ஓசியன் சாட்-3) ஆகிய செயற்கைக்கோளும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது.


1) கடந்த 75 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய மருந்தகமாக இந்தியா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Thursday, 23 July 2020

Bright Zoom Today (24 -7- 2020) இன்றைய வரலாறு...

Bright Zoom Today (24 -7- 2020)
இன்றைய வரலாறு...
வரலாறு... உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் பிறந்த தினம் இன்று..!!
தினம் ஒரு வரலாறு

அலெக்சாண்டர் டூமாஸ்


✍ உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் 1802ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் பிறந்தார்.

✍ இவர் தனது 20 வயதில் பத்திரிக்கைகளுக்கு கதை எழுத தொடங்கினார். இயல்பாகவே இவருக்கு எழுத்தாற்றல் இருந்ததால், விரைவில் பிரபலமானார்.

✍ 'தி கவுன்ட் ஆஃப் மான்ட் கிறிஸ்டோ", 'தி த்ரீ மஸ்கிடேர்ஸ்", 'ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர்" ஆகிய புதினங்கள் ஆரம்பத்தில் தொடர்கதையாக வெளிவந்து பிறகு நாவல்களாக புகழ்பெற்றன.

✍ சாகசங்கள் நிரம்பிய வரலாற்று நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.

✍ எழுத்துலகின் சிகரம் என்று போற்றப்பட்ட அலெக்சாண்டர் டூமாஸ் 1870ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்

🐅 1985ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி சென்னை வண்டலூர் மிருகக்காட்சி சாலை தொடங்கப்பட்டது.

👴 1974ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நியூட்ரானை கண்டுபிடித்த சர் ஜேம்ஸ் சாட்விக் மறைந்தார்.




Sunday, 16 September 2018

இன்றய நடப்பு நிகழ்வுகள்...!. செப்டம்பர்-17-09-2018

இன்றய நடப்பு நிகழ்வுகள்...!.

செப்டம்பர்-17-09-2018
Today Current Affairs, 

செப்டம்பர்-17-09-2018

தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 6,708 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

2.சிபிஎஸ்இ பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் நடத்தை விதிகள் மீறப்படுவதைக் கண்காணிக்க சி – விஜில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

2.பிரிட்டன் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய முதல் ஏவுதளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

3.நாட்டிலுள்ள 91 சதவீத காவல் நிலையங்கள், முதல் தகவல் அறிக்கை தொடர்பான தகவல்களை தேசிய தரவுத் தள அமைப்பில் பதிவேற்றம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலர், இணைச் செயலர் ஆகிய பதவிகளை இடதுசாரிகள் கூட்டணி கைப்பற்றியுள்ளது.


வர்த்தகம்

1.மத்­திய அரசு, நடப்பு நிதி­யாண்­டில், 1.50 லட்­சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூ­லிக்­கு­மாறு, பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.

2.உல­க­ள­வில், குடும்­பத்­தி­ன­ரால் நிர்­வ­கிக்­கப்­படும் நிறு­வ­னங்­கள் பட்­டி­ய­லில், இந்­தியா மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.

3.2025-ஆம் ஆண்டுக்குள் இருவழி முதலீட்டு இலக்கை ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் கோடியாக உயர்த்த இந்தியாவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது.


உலகம்

1.பிஜி தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.


விளையாட்டு

1.செர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டித் தொடரை 0-4 என இந்திய அணி இழந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை உலக தகுதிச் சுற்று ஆட்டம் கிரால்ஜெவோவில் நடைபெற்று வந்தது.



ன்றைய தினம்

  • மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)

  • பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)

  • தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)

  • தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)

  • திராவிடர் கழகத் தந்தை பெரியார் பிறந்த தினம்(1879)
Bright Zoom Today.

கடற்கரை கோவில் மகாபலிபுரம் | Beach Temple Mahabalipuram

கடற்கரை கோவில் மகாபலிபுரம்.!! Beach Temple Mahabalipuram.!! Bright Zoom Today, மகாபலிபுரம்.!! காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம...