இன்றய நடப்பு நிகழ்வுகள்16-09-2018
Today Current Affairs-16-09-2018
தமிழகம்:
தமிழகம்:
1.கல்லூரி உள்பட உயர் கல்வி படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.முன்னதாக, பிளஸ் 1 மதிப்பெண்களும் சேர்க்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2.தெற்கு ரயில்வேயில் பசுமைக் கட்டடச் சான்றிதழை பெற்ற முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பெற்றுள்ளது.
இந்தியா:
1.வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு, உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
வர்த்தகம்:
1.குடும்பத்துக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் சர்வதேச அளவில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.இங்கு 111 நிறுவனங்கள் குடும்பத்துக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. இவற்றின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 83,900 கோடி டாலராகும். சீனாவில் இந்த எண்ணிக்கை 159ஆகவும், அமெரிக்காவில் 121-ஆகவும் உள்ளன.
உலகம்:
1.தொலைபேசி அழைப்பை ஏற்கத் தவறிய ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதர் பிரியா விஜசேகரவை, அதிபர் மைத்ரிபால சிறீசேனா திரும்ப அழைத்துள்ளார்.
விளையாட்டு:
1.போலந்து நாட்டின் கிளிவைஸ் நகரில் 13-ஆவது ஸைலேஷியன் ஓபன் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் 60 கிலோ அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவை 0-5 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தானின் கரீனாவிடம் தோல்வியுற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
2.வரும் 2019 ஜனவரியில் நடைபெறவுள்ள டாடா மும்பை மாரத்தான் ஓட்டப்பந்தயத்துக்கு சர்வதேச தடகள சம்மேளனம் (ஐஏஏஎஃப்) கோல்ட் லேபல் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இன்றைய தினம்:
1.இன்று உலக ஓசோன் தினம்(World Ozone Day).
பூமியை கவசமாக இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. ஓசோன் படலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் க்ளோரோ புளோரோ கார்பன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டில் உருவானது. இதனை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
Bright Zoom Today
No comments:
Post a Comment