Sunday, 16 September 2018

இன்றய நடப்பு நிகழ்வுகள்...!. செப்டம்பர்-17-09-2018

இன்றய நடப்பு நிகழ்வுகள்...!.

செப்டம்பர்-17-09-2018
Today Current Affairs, 

செப்டம்பர்-17-09-2018

தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 6,708 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

2.சிபிஎஸ்இ பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் நடத்தை விதிகள் மீறப்படுவதைக் கண்காணிக்க சி – விஜில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

2.பிரிட்டன் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய முதல் ஏவுதளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

3.நாட்டிலுள்ள 91 சதவீத காவல் நிலையங்கள், முதல் தகவல் அறிக்கை தொடர்பான தகவல்களை தேசிய தரவுத் தள அமைப்பில் பதிவேற்றம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலர், இணைச் செயலர் ஆகிய பதவிகளை இடதுசாரிகள் கூட்டணி கைப்பற்றியுள்ளது.


வர்த்தகம்

1.மத்­திய அரசு, நடப்பு நிதி­யாண்­டில், 1.50 லட்­சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூ­லிக்­கு­மாறு, பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.

2.உல­க­ள­வில், குடும்­பத்­தி­ன­ரால் நிர்­வ­கிக்­கப்­படும் நிறு­வ­னங்­கள் பட்­டி­ய­லில், இந்­தியா மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.

3.2025-ஆம் ஆண்டுக்குள் இருவழி முதலீட்டு இலக்கை ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் கோடியாக உயர்த்த இந்தியாவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது.


உலகம்

1.பிஜி தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.


விளையாட்டு

1.செர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டித் தொடரை 0-4 என இந்திய அணி இழந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை உலக தகுதிச் சுற்று ஆட்டம் கிரால்ஜெவோவில் நடைபெற்று வந்தது.



ன்றைய தினம்

  • மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)

  • பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)

  • தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)

  • தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)

  • திராவிடர் கழகத் தந்தை பெரியார் பிறந்த தினம்(1879)
Bright Zoom Today.

உலக வரலாற்றில் இன்று...! World history today ...! September-17

உலக வரலாற்றில் இன்று...!

World history today ...!
September-17

இன்றைய வரலாற்று நிகழ்வுகள்...!

வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் - செப்டம்பர் 17 !!

ஈ.வெ.பெரியார்:

🏁 பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

🏁 இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக் கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார்.

🏁 இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி 'யுனெஸ்கோ நிறுவனம்" பெரியாருக்கு 'புத்துலக தொலைநோக்காளர்", 'தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்", 'சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை" என பாராட்டி விருது வழங்கியது.

🏁 அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி, பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

🏁 பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி (94வது வயதில்) மறைந்தார்.

நரேந்திர மோடி


✦ இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலம், மேஹ்சனா மாவட்டத்திலுள்ள வட்நகர் என்ற இடத்தில் பிறந்தார்.

✦ ஆர்.எஸ்.எஸ்-இன் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.

✦ பிறகு 1998-ல் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி, விரைவில் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

✦ 1998ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்ற பொழுது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2001-ல் குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். பிறகு 2014-ல் இந்திய பிரதமராக பதவியேற்றார்.

முக்கிய நிகழ்வுகள்

✍ 1889ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தப் படைப்பாளியுமான வ.ரா. எனப்படும் வ.ராமசாமி ஐயங்கார் தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திங்களூரில் பிறந்தார்.

🌍 1789ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல், மைமாஸ் என்ற துணைக்கோளை கண்டுபிடித்தார்.

👉 1953ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தமிழறிஞர்
திரு.வி.கலியாணசுந்தரனார் மறைந்தார்.

🏢 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.



சிந்திக்க தூண்டும்
சிந்தனை துளிகள்..!

'எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திட முடியும், உண்மையைத்தவிர."




இன்றய நடப்பு நிகழ்வுகள்16-09-2018

இன்றய நடப்பு நிகழ்வுகள்16-09-2018

Today Current Affairs-16-09-2018

தமிழகம்:

1.கல்லூரி உள்பட உயர் கல்வி படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.முன்னதாக, பிளஸ் 1 மதிப்பெண்களும் சேர்க்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2.தெற்கு ரயில்வேயில் பசுமைக் கட்டடச் சான்றிதழை பெற்ற முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பெற்றுள்ளது.


இந்தியா:


1.வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு, உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.


வர்த்தகம்:

1.குடும்பத்துக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் சர்வதேச அளவில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.இங்கு 111 நிறுவனங்கள் குடும்பத்துக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. இவற்றின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 83,900 கோடி டாலராகும். சீனாவில் இந்த எண்ணிக்கை 159ஆகவும், அமெரிக்காவில் 121-ஆகவும் உள்ளன.


உலகம்:

1.தொலைபேசி அழைப்பை ஏற்கத் தவறிய ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதர் பிரியா விஜசேகரவை, அதிபர் மைத்ரிபால சிறீசேனா திரும்ப அழைத்துள்ளார்.


விளையாட்டு:

1.போலந்து நாட்டின் கிளிவைஸ் நகரில் 13-ஆவது ஸைலேஷியன் ஓபன் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் 60 கிலோ அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவை 0-5 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தானின் கரீனாவிடம் தோல்வியுற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

2.வரும் 2019 ஜனவரியில் நடைபெறவுள்ள டாடா மும்பை மாரத்தான் ஓட்டப்பந்தயத்துக்கு சர்வதேச தடகள சம்மேளனம் (ஐஏஏஎஃப்) கோல்ட் லேபல் அங்கீகாரம் கிடைத்துள்ளது.


ன்றைய தினம்:

1.இன்று உலக ஓசோன் தினம்(World Ozone Day).

பூமியை கவசமாக இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. ஓசோன் படலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் க்ளோரோ புளோரோ கார்பன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டில் உருவானது. இதனை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.



Bright Zoom Today

கடற்கரை கோவில் மகாபலிபுரம் | Beach Temple Mahabalipuram

கடற்கரை கோவில் மகாபலிபுரம்.!! Beach Temple Mahabalipuram.!! Bright Zoom Today, மகாபலிபுரம்.!! காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம...